Thursday, December 2, 2010

சதுரஅடி ரூ. 1985-ல் அடுக்குமாடி குடியிருப்பு

சதுரஅடி ரூ. 1985-ல் அலுமினிய அடுக்குமாடி குடியிருப்பு: விஜிஎன் நிறுவனத்தின் புதிய திட்டம் தொடக்கம்


சென்னை, நவ. 30: சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் சதுரஅடி 1,985  ரூபாயில் அலுமினியத்தை அடிப்படையாகக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் புதிய திட்டத்தை விஜிஎன் கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் பிரதீஷ் தேவதாஸ் தெரிவித்தார்.சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய கட்டுமான திட்டத்தை இந்த நிறுவனத்தின் தலைவர் வி.என். தேவதாஸ் தொடங்கிவைத்தார்.இது தொடர்பாக நிர்வாக இயக்குநர் பிரதீஷ் தேவதாஸ் சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:சென்னை மற்றும் புறநகரில் ஏராளமான குடியிருப்பு திட்டங்களை விஜிஎன் நிறுவனம் நிறைவேற்றி வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை பெற்றுள்ளது. இப்போதைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த நிறுவனத்திடம் 600 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களைப் பயன்படுத்தி பல்வேறு குடியிருப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.நடுத்தர வருவாய் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரின் வாங்கும் திறனுக்கு ஏற்ப வீட்டுவசதிகளை வழங்குவதற்கான திட்டங்களை உருவாக்க மேற்கொண்ட முயற்சியின் பலனாக, விஜிஎன் பிர்க்ஸ்டன் திட்டம் தொடங்கப்படுகிறது.சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டையில் இந்த திட்டப்பகுதி அமைந்துள்ளது. இங்கு, 23 ஏக்கர் நிலத்தில் தலா 800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இரு பிரிவுகளாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் முதல் பகுதி 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.செங்கல் இல்லாத வீடுகள்:வழக்கமான வழிமுறைகளின் அடிப்படையில் செங்கற்களை பயன்படுத்தாமல் அலுமினியத்தை அடிப்படையாகக் கொண்ட ஏ.எல்.எப். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.முன்பே கட்டமைக்கப்பட்ட அலுமினிய பிரேம்கள், ஸ்டீல் மற்றும் கான்கிரீட் ஆகியவை மட்டுமே இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்பட உள்ளன.ஆடம்பர அடுக்குமாடி கட்டடங்களில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முதல் முறையாக குறைந்த வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பு கட்டுமான திட்டத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.வசதிகள்:இந்த குடியிருப்பு வளாகத்தில் உடற்பயிற்சி மையம், சமூகக்கூடம், திரையரங்கம், உள் விளையாட்டு அரங்க வசதிகள், கழிவுநீர் வடிகால் மற்றும் சுத்திகரிப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். 2 படுக்கை அறையுடன் 740 சதுரஅடி பரப்பளவில் ஒரு பிரிவாகவும், 3 படுக்கை அறைகளுடன் 1,235 சதுர அடி பரப்பளவில் மற்றொரு பிரிவாகவும் மொத்தம் 800 வீடுகளாக இந்த குடியிருப்பு வளாகம் அமைந்திருக்கும் என்றார் பிரதீஷ் தேவதாஸ்.விஜிஎன் நிறுவனத்தின் தலைவர் வி.என். தேவதாஸ், வர்த்தகப்பிரிவு தலைமை அதிகாரி ஏ.எம். ஹரி ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment